Thursday, January 26, 2006

குருதிக் கொடைக்குத் தயார்

தமிழக அரசு கேட்கும் நிவாரண உதவித் தொகையை உடனே வழங்குக: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வைகோ கடிதம்

நெய்வேலி லிக்னைட் கார்ப்போரேஷன் பங்குகளைத் தனியாருக்கு விற்காதே : பிரதமருக்கு வைகோ கடிதம்

பீகார் சட்டசபைக் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதால் பூட்டாசிங் விலகவேண்டும் : வைகோ அறிக்கை

அதிகாரத்திற்கு நாங்கள் ஆசைப்பட்டால் அதில் என்ன தவறு? – விழுப்புரத்தில் வைகோ முழக்கம்.

நேற்று சென்னை தி.நகர் பொதுக்கூட்டத்தில் இருந்து சில துளிகள்:

நீ பட்டறையாய் இருக்கும் போது அடி வாங்கிக் கொண்டு இரு. சம்மட்டியாய் ஆகும் போது அடி கொடு.

தொண்டர்களின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும் சேரும் அபூர்வ ரத்த வகையைச் சேர்ந்தது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் எங்கள் ரத்தம் சேரும். எந்த கட்சிக்காரர்களுக்கும் சேரும். யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு நாங்கள் கொடுப்போம்.

மதிமுக எங்கள் கூட்டணியில் இருக்கிறது என்றே நம்புகிறேன்: திமுக தலைவர் கருணாநிதி

திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கிறது :வைகோ

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வந்த செய்திகள்.. இவை வெறும் ஊடகப் பரபரப்பு மட்டும்தானா அல்லது வரிகளுக்கு இடையில் புதிய செய்திகள் இருக்கின்றனவா?

மீண்டும் வைகோ ஊடகங்களில் பேசுப்படும் பொருளாகி இருக்கிறார்..

“தந்தையும் தனயனும்” அல்லது “ஒரு கொடியில் இரு மலர்கள்” அல்லது “என் வழி தனி வழி” ..மூன்று படங்களில் மக்கள் எதைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் ?