Wednesday, June 29, 2005

தூது போனாரா பெர்னாண்டஸ்?

பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அத்வானிக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.சுதர்சனுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலைத் தீர்ப்பதற்கு சமாதானத் தூதுவராக ஜார்ஜ் பெர்னண்டஸ் செயல்பட்டார் என்று செய்திகள் கூறுகின்றன.
ஆர்.எஸ்.எஸ். ஸின் நம்பிக்கைக்கு உரியவராம் ஜர்ஜ்! அதே சமயம் அத்வானிக்கும் வேண்டியவராம்! மீடியாக்கள் சொல்கின்றன.

கே.எஸ்.சுதர்சன் சமீபத்தில் இந்தியாவின் சிறந்த பிரதமர் இந்திரா காந்தி என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலில் ஓடுவது இந்திரா எதிர்ப்பு ரத்தம்! அவர் சுவாசிப்பது காங்கிரஸ் எதிர்ப்பு ஆக்ஸிஜன்! என்ன செய்வார் அவர்? சுதர்சனுக்குக் கண்டனம் தெரிவித்தார். காங்கிரசுக்கு மாற்றாகக் கண்ணில் தெரியும் பாஜகவுக்குள் ஏற்பட்டிருக்கும் பூசல்கள் குறித்தும் வருத்தப்பட்டார்.

பிறகு அத்வானியின் தூதராக சுதர்சனைச் சந்தித்து இருக்கிறார். இந்திரா பிரச்னையில் சுதர்சனுக்குத் தெரிவித்த கண்டனத்துக்கு சமாதானம் செய்து முடிச்சுட்டு, அத்வானி பிரச்னையையும் பேசிட்டு வந்துடலாம்னு போனார் போல இருக்கு!
இதைத்தான் நம்ம ஊர்ல,”ஆடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்குப் பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு”ன்னு சொல்லுவாங்களோ?