Wednesday, October 05, 2005

நூறு வயதுக்கு மேல்தான் விவாகரத்து

" உன்னாட்டம் பொம்பளை யாரடி ஊரெல்லாம் உன் பேச்சு தானடி" என்ற ரஜினிகாந்த் படப் பாடலை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு இந்தப் பதிவு.

புதிய தொழில் உறவு சட்டம் ஒன்றை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வருகிறது. இதன்படி 300 தொழிலாளர்களுக்குக் குறைவாக இருக்கும் தொழிற்சாலைகள் ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்றவறைச் செய்வதற்கு எந்தத் தடையும் இருக்காது.

இதேபோல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொழிலாளர்களின் எண்ணிக்கை ஓராயிரத்துக்குக் குறைந்து இருக்கும் நிறுவனங்களில், ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருக்காது என்று கொண்டு வந்த மசோதா நாடாளுமன்றத்திலும் வெளியிலும் இடதுசாரிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டு காலாவதியானது.

அந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் வெப் உலகத்தில் 03.03.2001 அன்று நான் எழுதியதை மீள்பதிப்பு செய்கிறேன்.


நூறு வயதுக்கு மேல்தான் விவாகரத்து? புதிய சட்டம்!


ஓராயிரம் அல்லது அதற்கு மேல் தொழிலாளர்களைக் கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் தான் வரும் நிதியாண்டில் இருந்து இந்தியத் தொழில் தகராறுச் சட்டம் பொருந்தும். அதாவது தொழிலாளர்களின் எண்ணிக்கை ஓராயிரத்துக்குக் குறைந்து இருக்கும் நிறுவனங்களில், ஆட்குறைப்பும், கதவடைப்பும் இதுபோன்ற நடவடிக்கைகளை நிர்வாகம் எடுத்துக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருக்காது.

2001 - 2002 நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில் இந்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா குறிப்பிட்டதே மேல் கூறிய செய்தி. இது போல் வேறு என்னென்ன சீர்திருத்தங்களைக் கொண்டு வரலாம் என்று எமது உடான்ஸ் டீம் தங்கள் கற்பனையைத் தட்டி விட்டதன் விளைவு நிதியமைச்சரின் கீழ்க்கண்ட மற்ற அறிவிப்புகள்.

1. இரண்டு கோடி மக்கள் தொகைக்குக் குறைந்த பேரூராட்சிகளுக்கு, கிராமப்புற வளர்ச்சி நிதியில் இருந்து எந்த உதவியும் கிடையாது. கிராமப்புற வளர்ச்சி நிதியில் இருந்து உதவி பெற கிராமத்தின் மக்கள் தொகை இரண்டு கோடியாக இருக்க வேண்டும்.

2. இந்தியாவில் விவாகரத்து கோரும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகக் குறைந்த பட்ச வயது நூறாக இருக்கவேண்டும். அதற்கு இடையில் கோரப்படும் விவாகரத்துக்கள் சட்ட விரோதமானவை.

3. அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பாஸ் அல்லது கட்டணச் சலுகை பெற மாணவர்கள் 40 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும்.

4. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் மிகக்குறைந்த பட்சம் 20 வருடங்களாவது திரும்ப இந்தியா வராமல் இருந்தால் மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவர். இதற்கான சட்டத் திருத்தங்கள் விரைவில் செய்யப்படும்.

5. கிரிக்கெட் பித்தலாட்டத்தின் மூலம் ரூ 500 கோடிக்குக் கீழ் சம்பாதித்தவர்கள் மேல் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும். அதற்குக் குறைவான ஊழல், கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

6. ஹுன்டாய், போர்டு கார்கள் தவிர, வேறு எந்த வாகனங்களும் இந்திய சாலைகளில் ஓடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் இதற்கான உரிய சட்டத் திருத்தத்தை விரைவில் அறிவிப்பார்.

7. தொழிற் கல்விக்கான கடன் பெறத் தகுதியுள்ள மாணவ மாணவியர் தாய், தந்தை இல்லாமல் சுயம்புவாக அவதரித்தவர்களாக இருக்கவேண்டும்.

8. தீவிரவாதிகளால் கடத்தப்படும் பிரபலங்களை விடுவிக்கக் கொடுப்பதற்காக பிணைத் தொகை நிதி ஒன்று ரூ 100 கோடி முதலீட்டுடன் தொடங்கப்படும். இதிலிருந்து உதவி பெற, ஒரு பிரபலம் குறைந்தபட்சம் 100 நாட்களாவது பிணைக் கைதியாக தீவிரவாதிகளிடம் இருந்திருக்க வேண்டும்.

9. விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் அட்டை மூலம், கார்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவை மட்டுமே வாங்க முடியும். இந்த அட்டைக்கான பயன்பாட்டை முறைகேடாகப் பயன்படுத்தி உரம், விதை வாங்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

10. ரேஷன் அட்டைகள் வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகக் கிடைக்கும் செய்திகள் மிகுந்த மன வேதனையை அளிக்கின்றன. ரேஷன் அட்டைகள் வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாக இருந்த போதிலும், இவை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கச் செய்வது மத்திய அரசின் கடமை. எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்துக்களுக்குக் காவி அட்டையும், கிறிஸ்தவர்களுக்கு வெள்ளை அட்டையும், இஸ்லாமியர்களுக்கு பச்சை அட்டையும் வழங்கப்படவேண்டும். இதற்கான வழிகாட்டும் நெறிகளை மத்திய அரசு விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும்.

நன்றி: வெப் உலகம்

14 Comments:

At 8:12 AM, Blogger துளசி கோபால் said...

கவலையே இல்லை. அதுக்குள்ளே ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டு 'மேலே' போயிருவாங்க.

 
At 8:16 AM, Blogger ஜென்ராம் said...

பதிவைப் போட்டுவிட்டு திரும்புவதற்குள் போட்டுத் தாக்கிட்டீங்க..

 
At 8:22 AM, Blogger முகமூடி said...

// " உன்னாட்டம் பொம்பளை யாரடி ஊரெல்லாம் உன் பேச்சு தானடி" என்ற ரஜினிகாந்த் படப் பாடலை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு //

;-))

// போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் //

ஆஹா இது சம்பந்தமா நேத்துதான் நான் ஒரு அறிக்கை வுட்டேன்

 
At 10:22 AM, Blogger தெருத்தொண்டன் said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:38 AM, Blogger Ganesh Gopalasubramanian said...

// காவி அட்டையும், கிறிஸ்தவர்களுக்கு வெள்ளை அட்டையும், இஸ்லாமியர்களுக்கு பச்சை அட்டையும் வழங்கப்படவேண்டும். இதற்கான வழிகாட்டும் நெறிகளை மத்திய அரசு விரைவில் மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கும். //
இதென்ன பிஜேபி யோட உண்மையான அஜெண்டா மாதிரி இருக்கு

 
At 2:17 PM, Blogger ஜென்ராம் said...

உண்மையும் கற்பனையும் கலந்த உடான்ஸ் பகுதியில் எழுதியது. குஜராத் கலவரத்துக்கு முன்னால் எழுதியது. அட்டை வழங்காமலேயே இஸ்லாமியரது வீடுகள், கடைகள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டன என்றறியும் போது புள்ளிவிபரத்திற்காக என்று சொல்லி கேட்டுத் திரட்டப்படும் தகவல் கூட அழிவுப் பணிக்கு பயன்படுத்தப்பட முடியும் என்பது புரிந்தது.

நன்றி கோ.கணேஷ்

 
At 3:46 PM, Blogger ஜென்ராம் said...

முகமூடி:

// போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் // உங்கள் அறிக்கை படித்தேன். நன்றாக இருந்தது. நல்லதோர் வீணை நீங்கள்..;-))

'" உன்னாட்டம் பொம்பளை யாரடி ஊரெல்லாம் உன் பேச்சு தானடி"
பதிவு செய்ய அமரும்போது பாடல் ஒலித்தது என்றால் நம்பப் போகிறீர்களா? தொழிலாளர் பிரச்னை குறித்து பேசும்போது இதையும் சேர்த்து எழுதுவது இலையில் விருந்து படைத்து இறுதியில்…….. என்று ஆழமாகத் திட்டுவீர்கள். நடிகையை ஆதரித்து கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை பத்திரிகைகள் வெளியிடக் கூடாதாம்! இறுதி எச்சரிக்கை வந்து விட்டது. உங்களுக்கென்ன நீங்கள் முகமூடி அணிந்திருக்கிறீர்கள்.. போட்டிக்கு கட்சி நடத்துகிறீர்கள்..Long Angle இல் இருக்கிறீர்கள்..
நாங்கள் அப்படியா ?
அதனால் ஒரு முடிவுக்கு வந்து தான் அந்தப் பாடலை ஒதுக்கி வைத்தேன்.
கொண்டையில் தாழம்பூ இருந்தால் என்ன
நெஞ்சிலே வாழைப்பூ இருந்தால் என்ன
கூடையில் என்ன பூ இருந்தால் என்ன
நமக்கேன் வம்பூ வம்பூ ?

 
At 3:52 PM, Blogger பத்மா அர்விந்த் said...

Ramki
Long live democracy

 
At 5:10 PM, Blogger Unknown said...

அன்புள்ள ராம்கி,
உங்களுக்கு ஒரு தனி மடல் அனுப்பியுள்ளேன்.
உங்களின் உதவி தேவை.

 
At 6:17 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி தேன் துளி,
ஜனநாயகம் தழைக்கட்டும்.

 
At 6:20 PM, Blogger ஜென்ராம் said...

கல்வெட்டு,
உங்கள் தனிமடல் பார்த்தேன். என்னால் இயன்றவரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வாறெல்லாம் முயல்கிறேன்.

 
At 6:55 PM, Blogger Unknown said...

//என்னால் இயன்றவரை எங்கெல்லாம் எப்படியெல்லாம் எடுத்துச் செல்ல முடியுமோ அவ்வாறெல்லாம் முயல்கிறேன்.//

மிக்க நன்றி நண்பரே

 
At 9:01 PM, Blogger தாணு said...

அன்றைய தேதியின் உடான்ஸ் மட்டுமே போட்டா எப்பிடி? இன்னைக்கு நிலமையிலும் சுரீர்னு பதியிற மாதிரி நாலு உடான்ஸ் விட்டிருக்க வேண்டாமா? ராம்கிக்கு கொஞ்சம் சோம்பேறித்தனம் அதிகமாகுது போலிருக்கே?

 
At 8:33 AM, Blogger ஜென்ராம் said...

தாணு,
பாதி உண்மைதான். முயல்கிறேன். தூண்டுதலாக இருக்கிறீர்கள்.நேற்று வரவேற்பு சிறப்பாக முடிந்தது.ஏகப்பட்ட பிரபலங்கள். விபரம் தனி மடலில்.

 

Post a Comment

<< Home