Saturday, August 27, 2005

வருடுகிறாய் என்னை...

அன்பே ஆருயிரே படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து
மதுஸ்ரீ மற்றும் நரேஷ் அய்யர் பாடிய பாடல்.

பாடலில் பழைய சாயல் தெரிகிறதே என்று இசைமேதைகள் யாரும் கத்தி எடுத்து விடாதீர்கள்..
பாடலின் வரிகளைப் போலவே இசையும் மயிலிறகால் வருடிக் கொடுப்பது போல் உணர்ந்தேன்..பாடல் வரிகளைப் பதிகிறேன்..

பாடல் இதோ:

மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல
மழைநிலவே மழைநிலவே விழியில் எ(ல்)லாம் உன் உலா
உயிரைத் தொடர்ந்து வரும் நீ தானே மெய்யெழுத்து
நான் போடும் கையெழுத்து அன்பே!
உலக மொழியில் வரும் எல்லாமே நீர் எழுத்து
காதல்தான் கல்எழுத்து அன்பே (மயிலிறகே)

மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா
இங்கு வைகையில் வைத்திடு கை

பொதிகை மலையைப் பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்

ஓர் இலக்கியம் நம் காதல்
வான் உள்ள வரை வாழும் பாடல்! (மயிலிறகே)

தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இந்த சேவையில் வருதா
அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய்
கவி ஆற்றிட நீ வருவாய்

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா

பால் விளக்கங்கள் நீ கூறேன்
ஊர் உறங்கட்டும் உரைப்பேன் கேளு..
(மயிலிறகே)

10 Comments:

At 9:53 PM, Blogger தாணு said...

பாடல் வரிகள் கண்முன் தெரிகிறது, அத்துடன் இசை வடிவமும் காதுகளில் விழும் வண்ணம் பதிவு பண்ணியிருந்தால் முழு இன்பமும் புரிந்திருக்குமே!
காதல் வரிகள் எந்த வயதிலும் சுகம்தான், மயிலிறகோ மாநன்தோலோ!

 
At 5:14 PM, Blogger Sri Rangan said...

பாடலகளைக் கேட்க:http://www.lankasri.com
mp3<

 
At 9:36 PM, Blogger மு. மயூரன் said...

வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எந்தன் கதையே....
வாராயோ வெண்ணிலாவே..
இந்த பாடலை ஒருமுறை கேளுங்கள்.



இதேபாடல் மேற்க்த்தைய இசையிலும் அருமையாக இருக்கிறது.
ஒரே மெட்டினை வெவ்வேறு இசைவடிவங்களில் செய்திருப்பது அருமை.

//பொதிகை மலையில் பிறந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்//
என்று பாட்றும்போது உச்சத்தாயியில் எழும் ஆண்குரல் புல்லரிப்பு.

 
At 10:31 PM, Blogger ஜென்ராம் said...

மிக்க நன்றி ஸ்ரீரங்கன், மயூரன்..இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் ஒலிபரப்பிய பாடல்களை கே.எஸ்.ராஜா, அப்துல் ஹமீது தொகுத்து வழங்கி கேட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன. சினிமா பாடல்கள் தமிழ்ச்சேவையில் மட்டுமே தினமும் கேட்க முடியும் அந்த நாட்களில். நன்றி நண்பர்களே..மிக்க நன்றி..

 
At 10:54 PM, Blogger erode soms said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:55 PM, Blogger erode soms said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:55 PM, Blogger erode soms said...

This comment has been removed by a blog administrator.

 
At 10:55 PM, Blogger erode soms said...

மதுரை வைகை காய்ந்ததன்
காரணம் இன்றுபுரிந்ததய்யா...
அன்புடன்
சித்தன்.

 
At 7:25 AM, Blogger ஜென்ராம் said...

சோமு அவர்களுக்கு, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 
At 2:13 AM, Blogger சேதுக்கரசி said...

////பொதிகை மலையில் பிறந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைத்தேன் மனச்சிறையில்//

என்று பாட்றும்போது உச்சத்தாயியில் எழும் ஆண்குரல் புல்லரிப்பு.//

இதையே நானும் உணர்ந்திருக்கிறேன்! "பொதிகை மலையில் பிறந்து" என்ற இடத்தில் வருவது போன்ற அளவுக்கு உச்சஸ்தாயியில் பாடும் ஆண்குரல் கொண்ட பாடல்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன்.

 

Post a Comment

<< Home