Friday, July 22, 2005

பெற்றோருடன் வந்தால்தான் திருமணம் பதிவு

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போவோமா இல்லை ஓடிப்போய்க் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று குஜராத்தில் உள்ள காதலர்கள் பாட முடியாது போலும்!

அப்பா அம்மா சம்மதத்தை எழுத்துப்பூர்வமாக வாங்கி வந்தால் மட்டுமே குஜராத் மாநிலத்தில் இனி நீதிமன்றங்கள் திருமணங்களைப் பதிவு செய்யுமாம்..நரேந்திர மோடி அரசு இப்படி பதிவாளர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறதாம்.

இது சட்டப்படி செல்லுமா என்பது வேறு விஷயம்.காதல் திருமணங்களையும் கலப்பு மணங்களையும் தடுப்பதற்கான முயற்சியாகவே தெரிகிறது.

ஒரு வேளை இனி புரோகிதர் இல்லாமல் செய்யப்படும் திருமணங்களையும் பதிவு செய்யாதீர்கள் என்று சொன்னாலும் சொல்வார்கள்.சீர்திருத்தத் திருமணங்களுக்குச் சட்டரீதியிலான பாதுகாப்பு கொடுங்கள் என்று மத்திய அரசைத் தமிழகத்திலிருந்து வலியுறுத்தி வரும் காலகட்டத்தில் இது ஒரு பின்னடைவே..

பெற்றோரைப் புறக்கணிப்பதுதான் முன்னேற்றமா என்று யாரும் சீறிப் பாய்ந்து விடாதீர்கள்.
இந்திய சட்டங்களின்படி 21 வயது நிறைவடைந்த ஆணும் 18 வயது நிறைவடைந்த பெண்ணும் அவர்களது விருப்பத்துடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது குஜராத்துக்குப் பொருந்தாதா என்பதே எனது கேள்வி.

இன்னும் முழுவதுமாக செய்தி பார்க்கவில்லை. கேள்விப்பட்டவுடன் போட்ட பதிவு.

திருத்தங்களுக்குத்தான் பின்னூட்டம் இருக்கிறதே..

6 Comments:

At 10:45 AM, Blogger ஜென்ராம் said...

இன்று செய்தித் தாளில் பார்த்த பிறகு தான் முழு விபரம் தெரிந்தது.
//திருமணம் செய்து கொள்ள தடையில்லை, ஆனாலும், இது தேவையற்றதாகத் தான் தோன்றுகிறது//
நீங்கள் கூறுவது சரிதான். போலியான(?) திருமணங்களைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை என்கிறது அரசுத் தரப்பு.

 
At 12:29 AM, Blogger பத்மா அர்விந்த் said...

Ramki
some students from Madras registered their marriage without parents knowledge. They lived together for 3 years to reduce expense(!) and then went their way. one of the girl got married to a NRI with parents knowledge an dwent to apply for marriage license for Visa. They foudn out she already had registered a wedding an dthe second wedding is not legitimate unless the first one is divorced. The NRI husband left embarassed and so are the parents. This has become very common and hence I think this law is needed.

 
At 9:00 AM, Blogger ஜென்ராம் said...

பத்மாவின் பின்னூட்டத்திற்கு நன்றி.
//This has become very common and hence I think this law is needed. //
இது போன்ற நிகழ்ச்சிகள் விதிவிலக்காக இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள் common என்று சொல்கிறீர்கள். குடும்ப அமைப்பு மீதும் திருமணங்கள் மீதும் நமக்குள்ள நம்பிக்கைதான் இப்படிப் பேச வைக்கிறதோ?(வெளியில் ஆயிரம் பேசினாலும் நினைவிலி மனதில் திருமணம்,குடும்பம் இரண்டின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை எனக்கு இருப்பதாகவே தெரிகிறது)சாருஹாசன் மாதிரி குழந்தைகள் பெற்று பேரன் பேத்தி எடுத்த பிறகும் பல பத்தாண்டுகளாக திருமணம் என்கிற நிறுவனம் மீது நம்பிக்கை இல்லை என்று பேசிவருதல் நியாயமாகப் படவில்லை.அதனால் நான் எனது செயலின் மீது நம்பிக்கை இல்லாமலே செய்தேன் என்று சொல்லத் தோன்றவில்லை.

சரி பத்மா, எனது சந்தேகம் இதுதான்..
திருமணம் இரு மனங்களுக்கு இடையிலா அல்லது இரு குடும்பங்களுக்கு இடையிலா? மேஜரான இருவரது ஒப்பந்தத்திற்குப் பெற்றோர் கருத்தும் கேட்பது முறையா? இதன் சாதக பாதகங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு செயலுக்கும் பெற்றோர் அங்கீகாரம் கேட்கப்படுமா?

சிலர் தவறான(?) முடிவுகளால் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள் என்பது உண்மைதான்.அதே விஷயம் பெற்றோருக்கும் பொருந்துமே.

நன்றி.

 
At 10:52 AM, Blogger era.murukan said...

ராம்கி,

அரசுத்துறையின் சிவப்பு நாடா வழக்கம் போல் வெற்றிகரமாகச் செய்ல்பட்டால் இது 'குழந்தைகளுடன் வந்தால்தான் திருமணப் பதிவு' ஆக வாய்ப்பு உண்டு.

 
At 8:47 PM, Blogger ஜென்ராம் said...

நன்றி முருகன்,
எள்ளலை ரசித்தேன்.

 
At 10:38 PM, Blogger ஜென்ராம் said...

"நட்புக்காக" வலைபதிக்க வந்திருக்கும் தாணு அவர்களுக்கு எனது வரவேற்பும் நன்றிகளும்.

சேர்ந்து வாழும் கலாச்சாரம் பெருகுமோ என்று கவலைப்படுகிறீர்கள். இதற்குக் காரணம் குடும்பம்,திருமணம் ஆகியவற்றில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.

 

Post a Comment

<< Home