Sunday, September 04, 2005

சொல், கண்ணீர், ரத்தம்

ரம்யாவின் நிஜ பூதங்கள் படித்தேன். அதன் பின்னூட்டமாக நான் எழுதியதன் பதிவு:

//'கடவுளே.. அவள் வாழ்வில் நிஜ பூதங்கள் வராமல் இருக்கட்டும்' என்று வேண்டிக் கொண்டபடி நான் தூங்குவதற்குத் தான் கொஞ்சம் நேரமானது.// - இது ரம்யாவின் பதிவில் இருக்கும் வரிகள்..

//I am of the belief that one day in the future they will be completely extinguished. This is what I tell my son, and also tell him that he will get the courage to be part of the force that destroy them.// - இது தேன் துளியின் மறுமொழியில் இருக்கும் வரிகள்..

இரு வேறு சிந்தனைகள்..

காண்டேகரின் கிரௌஞ்சவதம் படித்திருக்கிறீர்களா?
சமூகத்தில் ஒரு தவறு..இதை 3 விதமாக மக்கள் எதிர்கொள்கிறார்கள்.

சொல் - கண்ணீர் - ரத்தம் !

வெறும் கண்டனப் பேச்சுக்கள் நமது வலைப் பதிவுகளைப் போல்..

தவறுகளைக் களைய கருத்துரீதியாக முடிவு, ஆனால் செயல்பாடின்றி போராடுபவர்கள் மீது அனுதாபம் மட்டும் கொண்டு கண்ணீர் விடுதல்..

செய் அல்லது செத்து மடி என்று களத்தில் நிற்கும் போராளிகள்..

ஒரு பேராசிரியர், சுலோ என்ற அவரது மகள், திலீபன் என்ற அவரது மாணவன்..மூன்று கதாபாத்திரங்கள் மூலம் இந்த "சொல், கண்ணீர், ரத்தம்" தத்துவத்தை நாவல் முழுக்க பிரமாதமாக விளக்கியிருப்பார்..

9 Comments:

At 4:20 PM, Blogger Ramya Nageswaran said...

ராம்கி, நன்றி.. நாவலை நான் படித்ததில்லை.

என்னை பொறுத்த வரை நீங்கள் சொல்லும் மூன்று விதமான reactions ஸும் mutually exclusive அல்ல. சூழ்நிலை மற்றும் நம்முடைய மனோதிடத்தை பொறுத்து நாம் react செய்வோம் என்று நினைக்கிறேன். இன்றைக்கு சற்று விரக்தியாக இருக்கும் நான் கண்ணீர் விட்டால், எல்லா சூழ்நிலையும் நான் கண்ணீர் தான் விடுவேன் என்று அர்த்தமில்லை.

இரண்டாவது, பத்மா சொல்லும் best case scenarioவின் மீது நம்பிக்கை வைத்தாலும், ஒரு practical scenario விற்கு மனரீதியாக தயாரகத் தான் இருக்க வேண்டியிருக்கிறது.

 
At 8:14 PM, Blogger தாணு said...

காண்டேகரின் கிரெளஞ்சவதம் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் தேடி சலித்துவிட்டேன்.அதில் வரும் இரண்டு
விஷயங்கள் எப்போதுமே பசுமையாக உள்ளது.
`முன்னிணையாகிய அன்றிலின் மோகம்கொள்’ பாடல் வரிகளும்,
`அன்பு செலுத்துவதென்றால் மலரோடு விளையாடுவது...
இன்றுதான் தெரிந்துகொண்டேன் அது நெருப்போடு
விளையாடுவது’- புத்தகம் தங்கள் வசம் இருந்தால் மறுபடி படிக்க தரலாமே! இந்த வயதில் அதன் கருத்து எப்படி புரிபடுகிறது என்று பார்க்க ஆசை.

 
At 8:52 PM, Blogger ramachandranusha(உஷா) said...

நன்றி ராம்கி, அடுத்த வருஷ லிஸ்டுல போட்டுட்டேன். தாணு, ரம்யா "யயாதி" படிச்சிருக்கிங்களா? என்னுடைய பெஸ்ட் லிஸ்டில்
முதல் பத்தில் வரும்.
ரம்யா உங்கள சிங்கபூர்ல பார்க்க முடியலைன்னு ரொம்ப மிஸ் பண்ணினேன்

 
At 9:42 PM, Blogger பத்மா அர்விந்த் said...

ராம்கி
எல்லாம் கலவையாக இருப்பதுதான் உண்மை. நன்றி. எனக்கு காண்டேகரின் புத்தகங்கள் படித்தது நினைவுக்கு வருகிறது. கலைமகளில் வரும்
உஷா:யயாதி கல்கியில் தொடராக வந்ததுதானே.

 
At 5:32 AM, Blogger Ramya Nageswaran said...

உஷா, நானும் தான் உங்களை மிஸ் பண்ணிட்டேன்.. கண்டிப்பா இன்னோரு முறை வாங்க!!

"யயாதி" யார் எழுதினது?

 
At 8:41 PM, Blogger ஜென்ராம் said...

ரம்யா: //இன்றைக்கு சற்று விரக்தியாக இருக்கும் நான் கண்ணீர் விட்டால், எல்லா சூழ்நிலையும் நான் கண்ணீர் தான் விடுவேன் என்று அர்த்தமில்லை.// ஒப்புக் கொள்கிறேன். கண்ணீர் விடுபவர்களையோ வெறும் சொற்சேவை செய்பவர்களையோ நான் குறைவாக மதிப்பிடவில்லை.

//practical scenario விற்கு மனரீதியாக தயாரகத் தான் இருக்க வேண்டியிருக்கிறது// முழுக்க சரி..

விடைத்தாளில் மாணவர்கள் எழுதும் தவறை ஆசிரியர் சிவப்பு மை கொண்டு திருத்துவதுபோல சமூகத்தில் தவறுகளை ரத்தத்தால் திருத்த வேண்டும் என்றும் காண்டேகரின் வரிகள் வரும்.

 
At 8:44 PM, Blogger ஜென்ராம் said...

தாணு:
பல புத்தகங்களை மீண்டும் வாசிக்கும்போது வேறுவிதமான புரிதல் கிடைக்கிறது. அதன்மூலம் நமக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

 
At 8:47 PM, Blogger ஜென்ராம் said...

உஷா: கிரௌஞ்சவதம், எரி நட்சத்திரம், வெண்முகில் இன்னும் அவரது எந்தப் புத்தகமாக இருந்தாலும் நீங்கள் வாங்கலாம். கா.ஸ்ரீ.ஸ்ரீ யின் மொழிபெயர்ப்பு வாசிக்கவே வாங்கலாம்..

 
At 8:49 PM, Blogger ஜென்ராம் said...

தேன் துளி:
//எல்லாம் கலவையாக இருப்பதுதான் உண்மை.//
உண்மைதான்..

 

Post a Comment

<< Home