Saturday, March 04, 2006

புயல் கரையைக் கடந்தது

இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் வைகோ சந்திக்கிறார். மாலை 3.00 மணிக்கு ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்.
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகி அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இணைந்து மதிமுக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் என்ற அறிவிப்பு இன்று வெளியிடப்படும்.

தாயகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக இந்தச் செய்தியை இன்று காலை முதல் சொல்லி வருகிறார்கள்.

2 Comments:

At 11:46 AM, Blogger ஜென்ராம் said...

soft tester:
உங்கள் பதிவைப் பார்த்தேன்.. நன்றி.
இட்லி வடை ஏற்கனவே இதே தகவலைக் கொடுத்திருப்பதைப் பார்க்காமலே நானும் இந்த இடுகையை இட்டிருக்கிறேன்.

 
At 7:52 AM, Blogger ஜென்ராம் said...

கருப்பு:

மிக உறுதியாகத் தெரிந்த அரசியல் அணியின் வெற்றியை ஓரிரு மனிதர்களின் ஈகோ கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.

எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று நினைத்து எஞ்சினையே தூக்கிப் போட்ட கதையாகி விடக்கூடாது என்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தல் களத்தில் அனல் பறக்கும் பிரச்சார பீரங்கிகளாக திகழக் கூடிய வைகோ, திருமா ஆகியோரை இழந்து நிற்கிறது புயல் ஏற்கனவே மையம் கொண்டிருந்த இடம்.

விஜயகாந்த் கட்சியையும் வளைத்து சேர்த்துக் கொண்டார்கள் என்றால் வெற்றி இடம் மாறிப் போகும் வாய்ப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை.

 

Post a Comment

<< Home