Monday, November 07, 2005

வலிமைக்கான பயிற்சி தந்த வலி

தொடங்கினால் முடிய வேண்டுமாம்..பிறப்பென்றால் இறப்பும் இருக்குமாம்..பரந்த உலகின் நியதியே இதுதான் என்றால் நட்சத்திர வாரம் மட்டும் நிரந்தரமாக இருக்குமா என்ன? அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 வரை கூடுதல் கவனம் கிடைத்தது உண்மைதான்.

கடந்த 2005 மே முதல் வலை பதியத் தொடங்கினேன். அதே தமிழ்மணம்..அதே பதிவர்கள்..ஆனால் இந்த ஒரு வாரத்தில் மட்டும் எல்லோருடனும் நெருங்கிய உணர்வு. காரணம் என்ன என்று புரியவில்லை.

இந்த வாரத்தை தீபாவளி ஸ்பெஷல் என்றார் ஒருவர். மழை மற்றும் மின்தடை ஸ்பெஷல் என்றே எனக்குத் தோன்றியது. வழக்கமாக பயன் தரும் மின்சக்தி இந்த வாரம் எரிச்சலூட்டும் விதத்தில் தடையாக இருந்தது. எப்படியோ தினம் ஒரு பதிவு என்பதில் தடை வராமல் சமாளித்துக் கொண்டேன்.

உடல் வலிமைக்காக உடற்பயிற்சிகள் செய்கிறோம். நீண்ட கால இடைவெளி விட்டு பயிற்சி செய்யும்போது அவையே சில சமயம் தாங்கமுடியாத வலியைக் கொடுக்கும். இந்த வாரம் ஓரிரு நாட்கள் அந்த வலியையும் உணர்ந்திருக்கிறேன்.

இந்த 7 நாட்களும் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து பின்னூட்டம் இட்டவர்களுக்கும், தனி மடல் இட்டு தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், படிப்பதோடு நிறுத்திக் கொண்டவர்களுக்கும் என் மனம் நெகிழ்ந்த நன்றி. நட்சத்திர வாய்ப்பளித்த தமிழ்மணம் பொறுப்பாளர்க்கு எனது சிறப்பு நன்றி.

இனி வழக்கமான பதிவுகளில் சந்திப்போம்..

12 Comments:

At 8:54 AM, Blogger மதி கந்தசாமி (Mathy) said...

மிகவும் அருமையாகச் சென்றது ராம்கி.

இம்மாதிரியான நட்சத்திரப் பதிவர்களே இந்த conceptக்கு பலம் சேர்க்கிறார்கள். அதுவும் பலர் அறியாமல் இருந்த இளவஞ்சி மற்றும் தங்களைப்போன்றவர்களின்மீது கவனம் விழுந்து அது தொடரும்போது சந்தோஷமாக/திருப்தியாக இருக்கிறது.

பணிகளைத் தொடர தெம்பும் கிடைக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி ராம்கி.

-மதி

 
At 8:54 AM, Blogger Dharumi said...

கூடுதல் கவனம் கிடைத்தது உண்மைதான்.//
என் வாரத்தில் இதை நானும் உணர்ந்தேன்..

 
At 9:55 AM, Blogger துளசி கோபால் said...

ராம்கி,

நல்ல வாரமாக இருந்தது. நன்றி.

வாழ்த்துக்கள்.
நல்லா இருங்க.

 
At 10:14 AM, Blogger Ramya Nageswaran said...

பதிவுகள் நன்றாக இருந்தன ராம்கி..எனக்கும் இப்பொழுது ஒரு நண்பர் கிடைத்த உணர்வு...

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்...

 
At 10:18 AM, Blogger Thangamani said...

நன்றி ராம்கி.

 
At 10:21 AM, Blogger காசி (Kasi) said...

நிறைவான வாரம். நன்றி ராம்கி. குறை சொல்லியே ஆகவேண்டுமென்றால் 'ஒரேயடியாக கனமாக இருந்தது' என்று வேண்டுமானால் சொல்லலாம். :-)

 
At 11:16 AM, Blogger ராம்கி said...

மதி கந்தசாமி, தருமி, துளசி கோபால்,
ரம்யா நாகேஸ்வரன், தங்கமணி மற்றும் காசிக்கு எனது அன்பும் நன்றியும்..

காசி: உடல் கனத்தைக் குறைக்க முயல்கிறேன். தலைக்கனம் இல்லை என்று நினைக்கிறேன். பதிவில் கனத்தைக் குறைத்திருந்திருக்கலாம்தான், சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்..நன்றி காசி!

 
At 2:21 PM, Blogger தாணு said...

நேரம்கிடைக்காதப்போவும், ராம்கி பதிவுக்கு பதில் எழுதணும்னு ஓடி ஓடி பெரிய பெரிய பின்னூட்டமா இட்டதுக்கு ஸ்பெஷல் நன்றி வேணும். சோமூ இன்று சென்னை வர்றார். காண்டேகர் கலெக்ஷனை வாங்கி அனுப்பவும். நாராவை நம்பவேண்டாம்!!!

 
At 3:04 PM, Blogger Nirmala said...

ஒரு வாரமா இணையம் கட்டாய ஓய்வு கொடுத்ததில் இப்போது தான் உங்கள் நட்சத்திர பதிவுகள் வாசிக்க முடிந்தது. சந்திப்பிற்குப் பிறகு உங்களோடு பொருத்தி வைத்திருந்த இமேஜ் மாறி விட்டது ராம்கி! :-)

நிர்மலா.

 
At 5:05 PM, Blogger பத்மா அர்விந்த் said...

ராம்கி
அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்.

 
At 8:04 PM, Blogger ராம்கி said...

தாணு: கேட்டு வாங்கிக் கொண்ட சிறப்பான நன்றிகள்..

தேன்துளி: தொடர்ந்து அளித்து வரும் ஊக்கத்திற்கு நன்றி..

 
At 8:09 PM, Blogger ராம்கி said...

நிர்மலா:

// சந்திப்பிற்குப் பிறகு உங்களோடு பொருத்தி வைத்திருந்த இமேஜ் மாறி விட்டது ராம்கி! :-)//

முதல் பிம்பமே என்னவென்று எனக்குத் தெரியவில்லையே.இப்போ எந்த பிம்பமா மாறியது என்றும் தெரியவில்லையே..தனிமடலிலாவது விளக்குவீங்களா? :-)

 

Post a Comment

<< Home