Thursday, January 26, 2006

குருதிக் கொடைக்குத் தயார்

தமிழக அரசு கேட்கும் நிவாரண உதவித் தொகையை உடனே வழங்குக: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு வைகோ கடிதம்

நெய்வேலி லிக்னைட் கார்ப்போரேஷன் பங்குகளைத் தனியாருக்கு விற்காதே : பிரதமருக்கு வைகோ கடிதம்

பீகார் சட்டசபைக் கலைப்புக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்து இருப்பதால் பூட்டாசிங் விலகவேண்டும் : வைகோ அறிக்கை

அதிகாரத்திற்கு நாங்கள் ஆசைப்பட்டால் அதில் என்ன தவறு? – விழுப்புரத்தில் வைகோ முழக்கம்.

நேற்று சென்னை தி.நகர் பொதுக்கூட்டத்தில் இருந்து சில துளிகள்:

நீ பட்டறையாய் இருக்கும் போது அடி வாங்கிக் கொண்டு இரு. சம்மட்டியாய் ஆகும் போது அடி கொடு.

தொண்டர்களின் மகிழ்ச்சியே எனக்கு முக்கியம். அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயங்கமாட்டேன்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும் சேரும் அபூர்வ ரத்த வகையைச் சேர்ந்தது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் எங்கள் ரத்தம் சேரும். எந்த கட்சிக்காரர்களுக்கும் சேரும். யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு நாங்கள் கொடுப்போம்.

மதிமுக எங்கள் கூட்டணியில் இருக்கிறது என்றே நம்புகிறேன்: திமுக தலைவர் கருணாநிதி

திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கிறது :வைகோ

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வந்த செய்திகள்.. இவை வெறும் ஊடகப் பரபரப்பு மட்டும்தானா அல்லது வரிகளுக்கு இடையில் புதிய செய்திகள் இருக்கின்றனவா?

மீண்டும் வைகோ ஊடகங்களில் பேசுப்படும் பொருளாகி இருக்கிறார்..

“தந்தையும் தனயனும்” அல்லது “ஒரு கொடியில் இரு மலர்கள்” அல்லது “என் வழி தனி வழி” ..மூன்று படங்களில் மக்கள் எதைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள் ?

9 Comments:

At 10:01 PM, Blogger Boston Bala said...

'கீழ்வானம் சிவக்கும்';

ஆனால், 'ஆளவந்தா'னை (ஸ்டாலினை) 'முதல்வனா'கக் கொண்ட 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' ஆட்சியா?

அல்லது 'குடியிருந்த கோயிலை' விட்டுவிட்டு 'தனிக்காட்டு ராஜா' 'பயணங்கள் முடிவதில்லை'யா?

 
At 10:46 PM, Blogger ஜென்ராம் said...

"சிறை" மறந்து "அன்னமிட்ட கை"க்கு சொந்தமான "அன்னை ஓர் ஆலயம்" கூடாதா என்ற "என் கேள்விக்கென்ன பதில்" என்று "தலைவனை" கேட்கிறானாம் "தொண்டன்".

இன்று காலை 11 மணிக்கு கலைஞரைச் சந்தித்தார் வைகோ. சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது. செய்தியாளர்களிடம் மாலை வரை யாரும் பேசவில்லை இந்த சந்திப்பு குறித்து..

 
At 10:48 PM, Blogger ஜென்ராம் said...

சந்திப்பின் விபரங்கள் குறித்து என்று வாசிக்கவும்,பாபா.

 
At 11:20 PM, Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் யாருக்கும் சேரும் அபூர்வ ரத்த வகையைச் சேர்ந்தது. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் எங்கள் ரத்தம் சேரும். எந்த கட்சிக்காரர்களுக்கும் சேரும். யாருக்குத் தேவைப்படுகிறதோ அவர்களுக்கு நாங்கள் கொடுப்போம்.

MDMK is not a donor but 'dealer' in blood.MDMK will say yes to the highest bidder. But frequent donations will result in enervation and lack of stamina.
the other party which has got blood from MDMK can always turn against MDMK as blood was given as a part of deal, not as gift.So MDMK will end up being in the receiving end. The problem is
it has been in the receiving end
more often than necessary.

 
At 12:06 AM, Blogger Unknown said...

வைகோ தனியாக நிற்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் அவ்வாறு செய்வதால் கட்சிக்கு நஷ்டமே. பா.ம.க எப்போதும் கூட்டணி அமைத்து (அல்லது மாறி) பதவிகளைப் பெற்று தமிழகத்தில் வலுவான கட்சி போல் தோற்றம் தருகிறது. வட மாவட்டங்களில் பா.ம.க பலமா இருந்தாலும் தென் பகுதியில் அவ்வாறு இல்லை என்பதே உண்மை. ஆனால் ம.தி.மு.க எல்லா இடங்களிலும் அறிமுகம் உள்ள கட்சி.

பொடாவில் உள்ளே தள்ளிய அ.தி.மு.க உடன் ...என்று எண்ணும் போது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.
ஆனால், எந்தத் தலைமையையும் அதன் செயல்பாட்டையும் எதிர்த்து ம.தி.மு.க தொடங்கப்பட்டதோ அதே கட்சியிடனேயே கூட்டணி அமைக்கத் தயங்காத போது....அ.தி.மு.க வுடனான கூட்டணி அரசியல்ல இதல்லாம் சகசமப்பா என்று ஆகிவிடும்.

 
At 12:09 AM, Blogger ஜென்ராம் said...

ரவி ஸ்ரிநிவாஸ்:

சக்கரங்கள் நிற்பதில்லை என்பது பொதுவான நம்பிக்கை.

 
At 12:22 AM, Blogger ஜென்ராம் said...

கல்வெட்டு: நீங்கள் தெரிவித்திருக்கும் சிந்தனையே பல தொண்டர்களிடமும் எதிரொலிப்பதாக ஊடகங்களில் இருந்து அறிய முடிகிறது. பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் ஆயிரக்கணக்கான மைல்கள் வழக்குகளுக்காக அலைக்கழிக்கப்பட்டதும் ஜெயலலிதா மீது கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது என்றும் நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க வை அனைத்துத் தொகுதிகளிலும் தோற்கடித்ததுடன் அந்த வேகம் சிறிது மட்டுப்பட்டது என்றும் சிலரிடம் பேசுவதில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. மாறாக திமுக கூட்டணியில் ஏதோ ஒருவிதத்தில் புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற கவலையும், அதிக சீட் தருபவருடன் கூட்டணி என்ற பேரத்திற்குக் கிடைக்கும் அங்கீகாரம் கொள்கைவழி நிற்பதில் கிடைக்கவில்லை என்றும் ஒரு சிந்தனை ஓடுவது போல் ஊடகங்களில்வரும் செய்திகளிலிருந்து தெரிகிறது.

திமுக கூட்டணியில் தொடர்தல் அல்லது எதிரணியில் சேர்தல் - இரண்டில் ஏதாவது ஒன்றுக்கே வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. தனித்துப் போட்டி என்ற முடிவுக்கு வைகோ வரமாட்டார் என்று நம்புகிறேன்.

 
At 1:14 AM, Blogger Sridhar said...

மதிமுக, திமுக எல்லாம் இறக்கும் தறுவாயில் உள்ள கட்சிகள்.இவர்கள் என்ன ஊளையிட்டால்.. ஸாரி.. சொன்னால் என்ன!

 
At 11:52 AM, Blogger ஜென்ராம் said...

njsridhar: உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை.

 

Post a Comment

<< Home