இணைந்து வளருமா இஸ்லாம் சமூகம்?
‘ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?’’
இந்தக் கேள்வியை நண்பர் அப்துல்லா என்னிடம் கேட்டார்.
ஏறத்தாழ 14 வருடங்கள் முடிந்தபிறகும் இன்னும் அந்தக் கேள்வியில் இருந்த வருத்தம் எனது நினைவில் உள்ளது.
கேட்ட நாள் 1992, டிசம்பர் 6.
அன்று மாலை இன்னும் சில இஸ்லாமிய நண்பர்களுடன் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அவரது உணர்வை என்னுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலுக்கு எனது பெயரில் ‘ராம்’ இருப்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி கொடுத்த வருத்தத்தில் இப்படிப் பேசுகிறார் என்பதற்குமேல் அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை அப்போது புரிய வில்லை. இப்போது சச்சார் கமிட்டி யின் ஆய்வு முடிவுகள், அந்த வார்த்தைகளின் முழு பரிமாணத்தைப் புரிய வைக்கின்றன.
சிறுவயது முதல் கற்பித்து வளர்க்கப்படும் பல கருத்துக்களே மனிதர்களிடத்தில் ஆழமான நம்பிக்கைகளாக வேர் விடுகின்றன. இந்தியா பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதத்தினர் சேர்ந்து வாழும் மதச்சார்பற்ற ஜனநாயக நாடு; இந்த வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் சிறப்பு என்று பல வருடங்களாக நாம் போதிக்கப்பட்டு வருகிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமை என்று சொல்லும்போது வேறுபட்ட கருத்தும் வாழ்க்கை முறையும் கொண்டவர்கள் ஒன்றாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், இந்தியாவின் அடிப்படை ஆதாரங்களை ஒற்றுமையுடன் சமமாகப் பகிர்ந்து வாழ்கிறார்கள் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறோம். பெரும்பான்மையானவர்களின் அந்த எண்ணத்தில், சச்சார் கமிட்டி அறிக்கை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 2005 ஆம் வருடம் மார்ச் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்தார். இந்தக் குழு இந்தியாவில் இஸ்லாமியர்கள் கல்வி ரீதியாகவும், சமூக அளவிலும் பொருளாதார நிலையிலும் எப்படி இருக்கிறார்கள் என்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக அமைக்கப்பட்டது. இந்த அறிக்கை சென்ற வாரம் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை பிரதமரிடம் கொடுக்கப் படுவதற்கு முன்பே ஊடகங்களில் அதன் முக்கிய அம்சங்கள் வெளியாகி விட்டன என்பது வேறு விஷயம்!
பிரிட்டிஷ் காலனி ஆட்சிக் காலத்தில் 1870 களில் மியோ பிரபு உத்தரவின் பேரில் முஸ்லிம்கள் குறித்துக் கணக்கெடுப்பு தொடங்கியது. அதன்பிறகு 1978 இல் ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி ஒரு சிறுபான்மை ஆணையத்தை நியமித்தது. மீண்டும் 1980 இல் ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, டாக்டர் செய்யது முகமது தலைமையில் சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு கமிஷன் அமைத்தார். டாக்டர் செய்யது முகமது வேறு பணிக்காகச் சென்றதும், கோபால்சிங் தலைமையில் இயங்கிய அந்த கமிஷன் தனது அறிக்கையை 1983 இல் அளித்தது. ஆனால், இதுவரை எந்த அரசும் இந்த அறிக்கை குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இதில் வி.பி.சிங், தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜரால் அரசுகளும் அடக்கம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி வரை எத்தனை ஆய்வுகள் நடந்திருந்தாலும், அவை அனைத்தும் ஒரே விஷயத்தைத்தான் அறிக்கையாகக் கொடுத்திருக்கின்றன. அதாவது கல்வி, அரசுப் பணி, ஆட்சிப் பணி, காவல்துறை, நீதித்துறை, நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை...
இஸ்லாமியர்களின் காவலராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களும் இந்த நிலையில் இருந்து விதிவிலக்காக இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது.
உண்மை நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய சமூகம் முழுவதிலும் ஆழமாக ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யும் அரசியலை நடத்தி வருகின்றன என்ற பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், உண்மை நிலையோ வேறுவிதமாக இருக்கிறது.
இந்தியா விடுதலை அடைந்த அறுபது ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பிறகும் முஸ்லிம்களின் நிலை இதுதானா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த அவசியமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
சில தனிமனிதர்களுக்கும் சில பண்பாட்டு நிகழ்வுகளுக்கும் சில சலுகைகளைச் செய்துவிட்டு அவற்றை ஒட்டுமொத்தமாக அந்த சமூகத் துக்குச் செய்த பணிகளாக சிலர் சித்திரிக்கிறார்கள். அவற்றையே எதிர்முகாமும் முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளாகச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால், இந்த சில அடையாள நடவடிக்கைகளால் முழு இஸ்லாமிய சமூகமும் பயன்பெறவில்லை என்பதை சச்சார் கமிட்டி தெரிவிக்கும் தகவல் உறுதி செய்கிறது.
மற்ற காங்கிரஸ் அரசுகளைப் போல் இல்லாமல் டாக்டர் மன்மோகன் சிங் அரசு இந்த விஷயத்தில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவதற்கு இடமிருக்கிறது. ஏனெனில் இப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அடிப்படையான சில மாறுதல்களில் அக்கறை காட்டுவதாகத் தெரிகிறது. அரசுப் பணிகள் உள்ளிட்ட சமூகத்தின் பல அங்கங்களிலும் முஸ்லிம்களுக்கு ‘நியாயமான’ பங்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் அதை இந்த அரசு உறுதி செய்யும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங் பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியிலும் பலர் முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீடு குறித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். மதரீதியிலான இட ஒதுக்கீடு செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை என்று எதிர்க்குரல்களும் கேட்கின்றன.
இஸ்லாமிய சமூகம் வளர்ச்சியடையாமல் பின்தங்கியதற்கு அந்த சமூகத்தின் அரசியல் தலைமைதான் காரணம் என்று குற்றம் சாட்டுபவர்களும் இருக்கிறார்கள். மைய நீரோட்டத்துடன் கலக்காமல் அவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்றும் சிலர் வாதிடுகிறார்கள். இந்தத் தடைகளையும் தாண்டி முதலில் அவர்களுக்கு உரிய கல்வி வசதி மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஒரு நாட்டின் வளர்ச்சியையும் நாகரிகத்தையும் ஜனநாயகப் பண்பையும் அளவிடுவதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. அவற்றில் அங்கு சிறுபான்மையினர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது. இந்தியாவில் அந்தக் காரணி படிப்படியாக எதிர்மறையாகப் போய்க் கொண்டிருக்கிறது.
கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரசுப் பணிகளிலும் மக்கள்தொகைக்கு நிகரான இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்காத இந்திய அரசு, அவர்களுக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிக சதவிகித இடங்களைக் கிடைக்கச் செய்திருக்கிறது.
ஆம்! சிறைச்சாலைகளில் மட்டுமே அவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
இந்த அவலநிலையைப் போக்குவது அரசின் கடமை. இல்லையெனில் அங்குதான் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று அரசே நினைப்பதாக அவர்கள் கருதிவிடக் கூடும்!
- ஜென்ராம்
நன்றி: ஜூனியர் விகடன் (03-12-2006)

17 Comments:
பல உண்மைகள் வெளிப்பட்டிருக்கின்றன.
ஜென்ராமுக்கும் ஜூ.வி.க்கும் ஸ்டேஷன் பெஞ்சுக்கும் நன்றிகள்!
// உண்மை நிலைமைகள் இப்படி இருக்கும்போது, இந்திய சமூகம் முழுவதிலும் ஆழமாக ஒரு கருத்து விதைக்கப்படுகிறது. இந்தியாவில் ஓரிரு கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் முஸ்லிம்களை மனநிறைவடையச் செய்யும் அரசியலை நடத்தி வருகின்றன என்ற பிரசாரம் நடந்து வருகிறது. ஆனால், உண்மை நிலையோ வேறுவிதமாக இருக்கிறது.
//
இது உண்மை என்பதை விட "சுடும் உண்மை" என்பது பொருத்தம். இது எப்படி 'சுடும்' என்பதை இந்திய உயர்குடி பிஸ்தாம் ஐஸ்கிரீம் பேபிகள் இங்கு வந்து - ஒடுக்கப்பட்ட முஸ்லிம் குழந்தையிடம் தாஜா செய்ய கொடுக்கப்பட்ட 'கடலை மிட்டாய்களை' சுட்டிக்காட்டி - பெருங் குரலெடுத்து அழுகும்போது தெரியும்.
இந்த பதிவை பார்க்கவும்:
http://catonwall.blogspot.com/2006/05/blog-post_114834831264396581.html
ராம்கி அய்யா,
இந்த பதிவிற்கு நன்றி!
சல்மான்
//எனது பெயரில் ‘ராம்’ இருப்பதுகூட காரணமாக இருந்திருக்கலாம்.//
உன் பெயரில் மட்டுமா ராம் இருக்கிறது 'ஹராம்' இல் கூட ராம் இருக்கிறது. நீ வேலை பார்க்கும் விகடன் குழுமத்தில் இசுலாமியர்களை விடு அந்தணரல்லாத இந்துக்களுக்கு எந்த அளவு இடம் இருக்கிறது? அதற்கான புள்ளி விவரத்தை வெளியிட்டு விகடன் ஆபிஸ் முன்னால் ஒரு காலவரையற்ற உண்ணாவிரதத்தை உண்மையாகவே இருந்து போய் சேரவேண்டியதுதானே.
//‘ஏன் சார் இப்படி நடக்குது? உங்களோட நாங்க படிக்கறதுக்குப் போட்டி போடறோமோ? அரசாங்க வேலைக்கு மல்லுக்கு நிக்கறோமா? அப்புறம் ஏன் எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை?’’//
என்ற ஆசாமியிடம் "ஏண்டா ரஷ்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்னு ரோட்டில வந்து பொது சொத்தை எரிச்சீங்க" (மறந்துடுச்சுன்னா பழைய இல்லஸ்ட்ரேட்டட் வீக்கிலியை மூஞ்சியில் எறிய வேண்டியதுதானே) ஏண்டா எங்கையோ உள்ள பாலஸ்தீனுக்கும் ஈராக்குக்கும் சவுண்டு விட தெரியுது ஆனா காஷ்மீர் இந்துக்களை உங்க ஆளுங்க கொன்னு துரத்தியடிச்சப்ப வாயை பொத்திக்கிட்டு சிரிச்சுட்டுருந்தீங்கன்னு? ஏண்டா ஷா பானு வழக்கை வச்சு அந்த ஆர்ப்பாட்டம் பண்ணுனீங்க?" அப்படீன்னு கேக்க வக்கில்லாம இப்ப இங்க இப்படி பெனாத்துனா எப்படி?
It is not that the government is supressing their growth.Any community or an individual has to put his own efforts to come up.Even the BJP govt has sacrificed predential post to a Muslim
அழகு, சல்மான், ஜெபா :
வருகைக்கு நன்றி..
அரவிந்தன் நீலகண்டன்:
//ஒரு காலவரையற்ற உண்ணாவிரதத்தை உண்மையாகவே இருந்து போய் சேரவேண்டியதுதானே//
உங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியமைக்கு நன்றி..
Are you writing under the pen name jen ram.This is yet another article that will appeal to
pseudo-secularlists and muslims
who want to make the most out of the Sachar committee report.
The report will be used to
further the vote bank politics
of UPA govt. I see this as another
move to appease muslims.
ரவி ஸ்ரீனிவாஸ்:
ஆம்..
பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்த காலத்தில் இருந்து இன்றைய சச்சார் கமிட்டி வரை அனைத்து விசாரணைக் குழுக்களும் ஒரே விதமான அறிக்கையையே அளித்துள்ளன. அதாவது இஸ்லாமியர்களின் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அவர்களுடைய கல்வி, பணி நிலைமைகள் இல்லை என்பதே அவற்றின் உள்ளடக்கம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இதுவரை அவர்களுடைய முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அந்த நிலை என்பது சச்சார் கமிட்டி அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது. தேர்தலில் வெற்றி பெறத் துடிக்கும் அனைத்து கட்சிகளும் வாக்கு வங்கி அரசியல் நடத்துகின்றன என்பது வேறு விஷயம்!
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்துக்கு முன்னரே என்று ஆரம்பித்தாயிற்று என்றால் பிரிவினை என்று ஒன்று நடந்ததே ஐயா அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். பாகிஸ்தானிலும் பங்களாதேஷிலும் இந்தியாவிலுமாக சேர்த்து கணக்கை பாருங்கள். அரசு உத்தியோகங்களில் அல்ல, கல்வி சாலைகளில் அல்ல, உலகத்தை விட்டே காணாமல் போன பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் சேர்ந்த இந்துக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். யாரும் முஸ்லீம்களை நீங்கள் உங்களுக்கென்று தனிச்சட்டம் வைத்து க்கொண்டு முடங்கி நாசமாக போங்கள் என கட்டாயப்படுத்தவில்லை. சச்சார் கமிட்டியின் category உருவாக்குதலே தவறானது - மதச்சார்பின்மைக்கு எதிரானது என ஏன் புரியவில்லை. மத அடிப்படையில் என பார்க்க ஆரம்பித்தால் இப்படி கூட பார்க்கலாம்: சைவர்கள் எனும் சிறுபான்மையினர் அவர்களது மக்கட்தொகை விழுக்காட்டிற்கு ஏற்ப அரசு வேலைகளில் கல்வி சாலைகளில் இருக்கிறார்களா? வைணவர்கள்? சீக்கியர்கள்? ஜைனர்கள்? இத்துடன் இணைத்து இந்தியா டுடே கிறிஸ்தவ சிறுபான்மையினர் அவர்களது மக்கட்தொகைக்கு அதீதமாக கல்வி-வேலை வாய்ப்புகளில் இருப்பதை காட்டியுள்ளதையும் கணக்கில் எடுத்தால் ஒருவேளை இஸ்லாமிய நம்பிக்கைகளே இசுலாமிய பிற்போக்குத்தனத்திற்கு ஒரு காரணியோ எனும் கேள்வியும் எழுப்பப்பட்டாக வேண்டும். ஆனால் சச்சார் கமிஷன் அறிக்கையோ மடத்தனமாக அல்லவா இருக்கிறது. மதரசாவில் வாங்கிய பட்டத்தை இந்திய நிர்வாக தேர்வெழுத தகுதியுடையதாக அறிவிக்கவேண்டும் என்றால் எப்படிப்பட்ட மடத்தனம் அது. அடுத்து வேதபாடசாலைகளில் தேர்ச்சி பெற்றவர்களையும் இந்திய நிர்வாக தேர்வெழுத தகுதியுடையதாக அறிவிக்கலாமா? ஜென்ராம் ஆராய்ந்து எல்லாம் எழுதுவது போல தோன்றவில்லை. எப்படி எழுதினால் தன் முற்போக்கு முலாம் தங்கும் என்பதனை காட்டத்தான் எழுதுவது போல தோன்றுகிறது. ஐயா ராம்கி நீர் போய் சேருவதில் எனக்கு விருப்பும் இல்லை வெறுப்பும் இல்லை. அறிவுசீவி வேசம் போட்டு பயனில் சொல் பாராட்டும் உம்முடைய மக்கட்பதடித்தனத்துக்கு அப்பால் இருக்கும் இரட்டை டம்ளர் மனோபாவத்தை காட்ட விரும்புகிறேன். தெளிவாக கேட்கிறேன். நீர் வேலை பார்க்கும் விகடனில் தலித் பட்டதாரிகளின் விழுக்காட்டிற்கேற்ப வேலைவாய்ப்புகளில் அவர்கள் காணப்படவில்லை என்றால், ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் அவர்களது விழுக்காட்டினைக் காட்டிலும் அதிகமாக வேலையில் இருப்பார்கள் என்றால் அப்படிப்பட்ட அநீதி வாய்ந்த வேலைசெய்யும் இடத்தை விட்டு நீங்கிட தயாரா? குறைந்த பட்சம் அடுத்த ஜூனியர் விகடனில் அந்த புள்ளிவிவரங்களை வெளியிடத்தயாரா? அதற்கு முடியவில்லை என்றால், அந்த குறைந்த பட்ச நேர்மைக்கு இடமில்லை என்றால் பொத்திக்கொண்டு போவ வேண்டியதுதானே. எதற்கு இப்படி ஒரு கீழ்த்தர அறிவுசீவி வேடம். எதுவோ பிழைக்கும் இந்த பிழைப்பு என்றான் பாரதி. இப்படிப்பட்ட கேவலங்களுடன் ஒப்பிட்டதற்கு பாரதியிடம் ஆத்திரமடையலாம் அந்த நன்றியுள்ள பாசாங்கு தெரியாத விலங்குகள்.
அரவிந்தன் நீலகண்டன்:
“விருப்பு வெறுப்பு இல்லாத” – “நடுநிலையான” –
“நாகரிகமான” சொற்கள் மட்டுமே கொண்ட –
எதையும் “ஊகம் செய்யாமல் உண்மைகளை ஆய்ந்தறிந்து” –
நீங்கள் இங்கு தெரிவித்த கருத்து மெய்சிலிர்க்க வைக்கிறது.. உங்கள் ஆத்திரம் தீர்ந்தால் சரி!
திரு அரவிந்த் அவர்களே!
மதத்தின் பெயரில், கன்க்கெடுப்போ, சலுகைகளோ வழங்குதல் கூடாதென்பது என்னுடையக் கருத்தும்கூட. அப்படிப் பார்த்தால், இந்து சமுதாயத்திலும், சில சிறுபான்மையினருக்கு, அவர்கள் பலத் துரைகளில் மேலான்மை இல்லை என்பதற்க்காக், அவர்களை ஊக்கப்ப்டுத்தும் வகையில் பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து வரும் என்னற்ற மேல்ஜாதிக்காரர்கள் கஷ்டப்பட்டு பண்ம் கொடுத்து படிக்கும்போது, பணக்கார பின்படுத்தப்பட்டோர் மட்டும் சலுகைகளைப் பெறுவது ஏன்? அந்த சமுதாயத்தின் பெறும்பான்மை மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதற்காகத்தான் அரசு இத்தகைய சலுகைகளை அந்த சமுதாயத்தில் அனைவருக்கும் வழங்குகிறது.
இந்தக் கணக்கெடுப்பு அரசுக்கு மட்டுமல்ல, ஏனைய முஸ்லிம் சமுதாயத்தார்க்கும் அவர்களதுத் தன்னிலையை உண்ர்த்தி அவர்களை மேன்படுத்திக் கொள்ளப் பயன்படும் என்பதே என் கருத்து.
உங்களுடைய வாதம், முஸ்லிம்களின் மேலுல்ல வெறுப்பாகவேத் தென்படுகிறதெயென்றி, ஒரு நடுநிலையாய்த் தெரியவில்லை.
ரா.சம்பத்,
அனைத்து விஷயங்களிலும் தீர்ப்புகளை வழங்கி விட்டீர்கள்.. அதன் பின் விசாரணைகளுக்கும் விளக்கங்களுக்கும் விவாதங்களுக்கும் இடமில்லை. என் மீது – என் கட்டுரையை பிரசுரிக்கும் நிறுவனத்தின் மீது – உங்களுடன் ஒரே சமூகத்தில் வாழும் ஒரு மதத்தினர் மீது உங்களுக்கு இருக்கும் வெறுப்பு உங்கள் சொற்களில் வெளிப்படுகிறது. மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்போரை எப்படி அணுக வேண்டும் என்று நிறைந்த தெளிவுடன் இருக்கிறீர்கள். மிகவும் அக்கறையுடன் நேரம் செலவழித்து இந்தப் பதிவில் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு எனது நன்றிகள்.
very nice trick ஜென்ராம் எ ராம்கி,
யாரெல்லாம் சச்சார் கமிட்டீ ரிப்போர்ட்டுக்கு எதிர் கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்களை எல்லாம் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று ஒரோ முத்திரையை குத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.!
உங்கள் tunnel vision ல் என்று தான் உண்மை புலப்படுமோ தெரியவில்லை.
சச்சார் கமிட்டி பரிந்துரையிலேயே மே. வ, கேரளா போன்ற மானிலத்திலும், மௌலானா "முல்லா"யம் சிங் யாதவ் ஆளும் உ.பி யிலும் இஸ்லாமியர்கள் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது.
அதிகம் முன்னேறிய முஸ்லீம்கள் இருக்கிறார்கள் என்றால் அது குஜராத் தில் தான் என்பதும் சொல்லியிருக்கிறார்.
30 ஆண்டுகால ஆட்சியில் முஸ்லீம்களுக்கு சாதகமாக ஆண்ட மே. வ கம்யூனிஸ்டுகள் (அறிவு சீவிக்கள்) சாதிக்க இயலாத காரியத்தை இந்த சச்சார் கமிட்டியின் பரிந்துரையின் பெயரில் சோனியா அரசு சாதிக்கப் போகிறாதா ?
இதெல்லாம் எதற்காக ?
யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த stunt ?
இப்போது அனைத்துத் துரைகளிலும் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு செய்தால் என்ன நடக்கும் ?
இதுவரை இட ஒதுக்கீடு செய்யப் பட்டதினால் எந்த சமூக முன்னேறியுள்ளது ?
இட ஒதுக்கீடு செய்யப் பட்ட சமூகத்திலெல்லாம் creamy layer உருவாகியுள்ளது நிதர்சன உண்மை.
மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கான அடிப்படை வித்து இது என்றால் நமது constitution (அரசியல் அமைப்பு) ல் secular என்ற வார்த்தைக்கு என்ன மதிப்பு ? (அதன் மதிப்பை இன்று கேவலமான நிலைக்குக் கொண்டு சென்றது 60 ஆண்டுகால செகுலர் ஆட்சிகளே என்பதும் உண்மை)
நல்ல கல்விக் கூடங்கள் இஸ்லாமியருக்குக் கிடைப்பதில்லை என்கிறார் சச்சார்.
இஸ்லாமியருக்கு மட்டுமா கிடைப்பதில்லை ?
//
ஆனால், அரசியல் கட்சிகள் எதுவும் இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான எந்த அவசியமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
//
அவர்கள் எந்த சமூகம் முன்னேற அவசியமான நடவடிக்கையை எடுத்துள்ளனர் ?
இஸ்லாமியர் ஒன்றும் விதிவிலக்கல்ல.
//
அவற்றில் அங்கு சிறுபான்மையினர் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது.
//
Total bullshit.
15% of Indian population is way too bigger a number than total population of France or Germany or Italy. (the combined number is approx 200 million in all three countries, while in india alone there are 150 million muslims)
இது போன்ற மைனாரிட்டி, மெஜாரிட்டி என்ற பிரிவினையை விதைக்காமல் objective யோசனைகள் உங்கள் மூளையில் உதிக்குமா என்பதை தெளிவு படுத்தவும் !
Like anyother community, some muslims are richer than rich arabs some are poorer than sub saharan africans.
The point i am driving at is,
No community is been spared of this marked difference in wealth distribution. And it has been there for long.
What is the necessity now to bring into light the most obvious thing that any body can notice in india in the context of a particular religious group ?
சிறப்பான கருத்துக்களை அறியத்தந்தமைக்கு நன்றி
மௌரியன்:
//யாரெல்லாம் சச்சார் கமிட்டீ ரிப்போர்ட்டுக்கு எதிர் கருத்து தெரிவிக்கிறார்களோ அவர்களை எல்லாம் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று ஒரோ முத்திரையை குத்திவிட்டீர்கள்.//
நிச்சயம் இல்லை.. சட்டவிரோதமான செயல்களில் முஸ்லீம்கள் அனைவரும் இறங்குவதான பொருளில் அந்த நண்பர் குறிப்பிட்டிருந்ததால், அவர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பு வெளிப்பட்டது என்று சொன்னேன்.. அவ்வளவு தான்..
// சச்சார் கமிட்டி பரிந்துரையிலேயே மே. வ, கேரளா போன்ற மானிலத்திலும், மௌலானா "முல்லா"யம் சிங் யாதவ் ஆளும் உ.பி யிலும் இஸ்லாமியர்கள் மிகவும் பின் தங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது//
இதை நானும் எனது பத்தியில் குறிப்பிட்டிருக்கிறேன். " இஸ்லாமியர்களின் காவலராகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் அரசியல் கட்சிகள் ஆட்சி நடத்துகிற மாநிலங்களும் இந்த நிலையில் இருந்து விதிவிலக்காக இல்லை என்பது மேலும் அதிர்ச்சி தருகிறது"
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பிறரது கருத்தை bullshit என்று ஒதுக்கும் தங்கள் பக்குவத்திற்கு வாழ்த்துக்கள்.
திரு. ராம்கி, தெளிவான கட்டுரை ஒன்றை தந்ததற்கு நன்றி.
இந்திய முஸ்லிம்களின் பின் தங்கிய நிலைக்கு அரசாங்கத்தை மட்டும் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் அதன் உண்மையான காரணங்களை கண்டறிந்து முன்னேற்றப் பாதையில் இச்சமூகத்தை வழிநடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு இஸ்லாமிய சமுதாய தலைவர்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் சச்சார் கமிட்டி அறிக்கையை இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு எச்சரிக்கை ஒலியாக எடுத்துக் கொள்ளலாம்.
ஜென்ராமின் பல கட்டுரைகள் சிந்தனைக்குறிய விஷயங்களை எளிய நடையில் வழங்கியிருக்கின்றன. நீங்கள் இந்தப் பெயரில் எழுதுகிறீர்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி.
ராம்கி,
இந்திய அணுசக்தியின் தந்தை அப்துல் கலாமின் திறமைக்குக் குறைந்த பதவியை குஜராத் கலவரத்தால், இனி எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு உலகத் தலைவர்களை சந்திப்பேன்? என்று விம்மியபடி கிழிந்து தொங்கிய முகமூடியை தைப்பதற்காக வழங்கி, ஏனைய இருபது கோடி முஸ்லிம்ககளின் வழிபாட்டுத் தலங்களை இடித்தும், தடா,பொடா என கருப்புச் சட்டங்களில் சிறையிலடைத்து, அறுபதாண்டுகாலமாக சுதந்திரத்திற்கு எந்த பங்களிப்பும் செய்யாமல் உயர் பதவிகலில் விடாப்பிடியாக ஒட்டிக் கொண்டு இருப்பவர்களிடம், தங்கள் சதவீதத்தை விட அதிகளவில் தியாகம் செய்து, ஆங்கிலேயருக்கு எதிராக ஜிஹாது செய்யச் சொல்லி, ஆங்கிலம் கற்பதை ஹராம் என்ற சமூகத்தவருக்கு இதர வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் 'விடா/கொடாக் 'கண்டன்'களிடம் "இணைந்து வளருமா இஸ்லாம் சமூகம்?" என்று கேட்டால் எப்படி?
சுதந்திரப் போராட்ட தியாகிகளைக் காட்டிக் கொடுத்தவருக்கு மும்முறை பிரதமர் பதவி; ரத யாத்திரை செய்து ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களின் ரத்தத்தைக் குடித்தால் துணை பிரதமர், உள்துறை பதவி; கற்பினியாவது குழந்தையாவது தொலைந்து போங்கடா! என்று இனச் சுத்திகரிப்பு செய்தால் முதலமைச்சர் பதவி!
காஷ்மீரில் விரட்டியடிக்கப்பட்ட பண்டிட்டுகளுக்காக, குஜராத்திலும், பாகல்பூரிலும், மீரட்டிலும் கொல்லப்பட்ட, சொந்த நாட்டிலேயே அகதியாய் முஸ்லிமாகப் பிறந்த பாவத்திற்காக ராணுவ முகாம்களில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் முஸ்லிம்களின் இரத்தம் போதாதா?
ருஷ்டிக்கும், தியோவாங்கோவுக்கும் கண்ணீர் விட அவாள்களுக்கு உரிமை இருக்கும் போது, முஸ்லிம் என்பதற்காக மட்டுமல்ல, அநீதிக்கு எதிராக உள்ளக் குமுறலைக் காட்டிய சக மனிதன் என்றளவிலேயே பாலஸ்தீன,இராக்கிய, ஆப்கானிய மக்களுக்காக குரல் கொடுக்கிறார்கள்.
பதிவுக்கு நன்றி
செந்தழல் ரவி, இப்னு பஷீர், நல்லடியார்:
வருகைக்கும் கருத்துக்கும் கனிவான சொற்களுக்கும் நன்றி..
Post a Comment
<< Home