Friday, June 09, 2006

மதுமிதாவின் ஆய்வுக்கான தகவல்

வலைப்பதிவர் பெயர் : ராம்கி

வலைப்பூ பெயர் : 1. ஸ்டேஷன் பெஞ்ச் 2. தெருத்தொண்டன்

சுட்டி(url) : 1. http://stationbench.blogspot.com
2. http://theruththondan.blogspot.com

ஊர்: பிறந்தது தென்திருப்பேரை; வளர்ந்தது ஆறுமுகநேரி.
இரண்டு கிராமங்களுமே இப்போது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: எதையோ தேடிக் கொண்டிருந்தபோது பார்த்த ஒரு வலைப்பூவின் தூண்டுதலில் சுயமாக அறிந்து கொண்டேன்

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
1. ஸ்டேஷன் பெஞ்ச் : மே 04, 2005

2. தெருத்தொண்டன் ஜூன் 25, 2005

இப்பதிவின் சுட்டி(url): http://stationbench.blogspot.com/2006/06/blog-post.html


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: இணையத்தில் மட்டும் எனது கருத்துக்களுக்கான தளம் இல்லாமல் இருந்ததாலும் ஆரோக்கியமான விவாதத்திற்கான களமாக இருக்கும் என்று நினைத்ததாலும் தொடங்கினேன்.

சந்தித்த அனுபவங்கள்: புதிய அறிமுகங்கள் மகிழ்ச்சி தந்தன. மேலே குறிப்பிட்டுள்ள நோக்கத்தில் சில சமயங்களில் ஏமாற்றமும் கிடைத்தது.

பெற்ற நண்பர்கள்: மதுமிதா முதல் மதியிலி வரை முகம் தெரிந்த மற்றும் முகம் தெரியாத ஏராளமானோர்.

கற்றவை: வாசிக்கும் ஒவ்வொரு பதிவில் இருந்தும் ஒரு தகவல் அல்லது ஒரு பார்வை

எழுத்தில் கிடைத்த சுதந்திரம் : கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்பது லட்சியமாக இருந்த போதிலும் பிறரைப் பாதிக்காத வகையில் பயன்படுத்தியதாகவே உணர்கிறேன்.

இனி செய்ய நினைப்பவை: பிற ஊடகங்களில் செய்யும் பணிகளில் உருப்படியானவற்றை வலைப்பதிவில் இடுகைகளாக்கலாம் என்ற எண்ணம்

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:
ஒரு வங்கி அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்று பத்திரிகையாளனாக இருப்பவன்.

அச்சுத் துறை:

தினமலர் (நெல்லை குழுமம்)

ஜூனியர் விகடன் வாரம் இருமுறையில் ஜென்ராம் என்ற பெயரில் பத்திகள்

தமிழன் எக்ஸ்பிரஸ் வார இதழில் தெருத்தொண்டன் என்ற பெயரில் பகிரங்கக் கடிதங்கள்

இணையம்:
வெப் உலகம் இணையதளம் தொடங்கிய காலம் முதல் 17 மாதங்கள் இலக்கியம், அரசியல் பகுதிகளுக்குப் பொறுப்பாசிரியர்

தொலைக்காட்சி:

திரைக்குப் பின் பணியாற்றிய நிகழ்ச்சிகள்: மின்பிம்பங்களுக்காக
தமிழா தமிழா, நையாண்டி தர்பார், தேர்தல் 1999, முதல் பிரதி, அச்சமில்லை அச்சமில்லை போன்ற நிகழ்ச்சிகள்.

சுதாங்கனுக்காக வாக்குப்பெட்டி 1998, தேர்தல் 1998.

ராடன் டிவிக்காக: தங்க வேட்டை

திரையில் தோன்றிய நிகழ்ச்சிகள்: ஸ்டார் விஜய் டி.வி.யில்
மக்கள் யார் பக்கம், மக்கள் தீர்ப்பு 2004.

இமயம் தொலைக்காட்சியில் தேர்தல் 2006.

நன்றி:

1. எனக்குத் தமிழ் கற்றுத் தந்த என் தந்தை

2. சாந்தி, சரஸ்வதி, மணிக்கொடி போன்ற இதழ்களை வீட்டின் இடத்தை அடைப்பதாகக் கருதி வெளியில் போடாமல் பாதுகாத்துத் தந்த என் தாய்

3. என்னைப் பத்திரிகை உலகிற்கு அறிமுகம் செய்து தெருத்தொண்டன் என்ற பெயரும் சூட்டிய பத்திரிகையாளர் சுதாங்கன்

4. எனக்குக் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கிய மின்பிம்பங்களின் மேலாண் இயக்குநரும் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் புதல்வரும் ஆகிய நண்பர் பால.கைலாசம்

5. எனது வேலைப்பளுவை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளும் மனைவி மற்றும் நண்பர்கள்

5 Comments:

At 12:16 AM, Blogger தருமி said...

இமயம் தொலைக்காட்சியில் ....???

 
At 12:47 AM, Blogger ஜென்ராம் said...

ஆம் தருமி.. அதுதான் நிலைமை..

காரணம் ஊரறிந்த ரகசியம்..

 
At 12:09 PM, Blogger தாணு said...

ராம்கி
படப்பிடிப்பின் பிஸி வேளையில் இழுத்து வந்துவிட்டேனோ? எல்லாம் நன்மைக்கே. புது மண மக்கள் சென்னைக்கே வருவார்கள் தங்கள் ஆசி பெற!!! அப்படியே ஊரும் சுற்றத்தான்.

 
At 1:24 AM, Blogger நாமக்கல் சிபி said...

ஆறு விளையாட்டிற்கு ஆட வாங்க!

http://pithatralgal.blogspot.com/2006/06/108.html

 
At 9:34 PM, Blogger ஜென்ராம் said...

தாணு,
பரவாயில்லை.. நன்றி..

சிபி,
அழைப்புக்கு நன்றி.. சில நாட்களாக வெளியூர் அலைச்சலும் அதைத் தொடர்ந்து உடல்நலக் குறைவும்...
இந்த வார இறுதியில் தலையைத் தூக்கி மானிட்டர் பார்க்க இயன்றதும் ஆறு ஆட்டத்தில் பங்கேற்கிறேன்.. தாமதத்திற்கு மன்னியுங்கள்.

 

Post a Comment

<< Home